Notice: Only variables should be passed by reference in /home/xs7d1onnbe6c/domains/rooftopsolar.lk/html/ta/includes/header.php on line 3

பின்னணிப் பக்கம்

இலங்கையில் கூரை உச்சியில் (மேற்கூரையில்) சூரிய ஒளிமின்னழுத்திய (PV) சக்தி பிறப்பாக்கல் அமைப்பினை நிறுவுவதற்காக ‘கூரை உச்சியில் (மேற்கூரையில்) சூரிய ஒளிமின்னழுத்திய (PV) சக்தி பிறப்பாக்கல் திட்டம்’ நீண்ட காலக் கடன் அடிப்படையில் நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்குகின்றது. தேவைப்பட்டுள்ள நிதியினை விரும்பிய தவணைகளில், அதாவது இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 50 மில்லியன் அமெரிக்கா டொலர் எனும் உயர்ந்தபட்சக் கடன்தொகையினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்றது. இத்திட்டத்தின் பகுதி ஒன்றாக, கூரை உச்சியில் (மேற்கூரையில்) சூரிய சக்தி நிறுவலின் மேம்பாட்டிற்கு பெறுமதியை சேர்க்கும் விதமாக சூரிய சக்தி கூரை உச்சி (மேற்கூரை) அமைப்பிற்கான தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் தரநிலைகள் உள்ளடங்கலாக தொழில்நுட்ப மற்றும் வர்த்தகக் கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. உயர்ந்தபட்சக் கடன் எல்லை நிதி அமைச்சினால் (ஆழகு) மேலாண்மை செய்யப்படுகின்றது. மேலும் தெரிவு செய்யப்பட்ட வங்கிகள் (அங்கீகரிக்கப்பட்ட பங்குபற்றல் நிதியியல் நிறுவனங்கள்- PFI) ஊடாக நிதியானது பயனாளிகளுக்கு பரிமாற்றப்படுகின்றது. தொழில்நுட்ப உதவியானது திட்ட நடைமுறைப்படுத்தல் பிரிவினால் (PIU) வழங்கப்படுகின்றது. மேலும் இது நிதி அமைச்சு, மின்வலு, சக்திவலு, மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு (MoPE), மற்றும் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை (SLSEA) ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பையும் பெற்றுள்ளது.

பின்வரும் மூன்று திட்டங்களின் கீழ் இலங்கையிலுள்ள மின்சேவை வழங்குநர்களான வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் ஊடாக தேசிய மின்வழங்களுடன் கூரை உச்சி (மேற்கூரை) சூரியசக்தி PV நிறுவலின் ஊடாக சக்தி பிறப்பாக்கத்தினை ஒருங்கிணைக்க முடியும்.

கூரை உச்சியில் (மேற்கூரையில்) சூரிய சக்தி பிறப்பாக்கல் திட்டங்கள்:

நிகர அளவீட்டுத் திட்டம்

நிகர அளவீடானது விலையிடல் (பட்டியலிடல்) பொறிமுறையாகும். இது மின்வழங்களுக்கு சூரிய சக்தி அமைப்பின் உரிமையாளர்கள் இணைக்கவுள்ள மின்சாரத்திற்காக அவர்களுக்கு வரவு வைக்கின்றது.

இது கருதுவது யாதெனில் மாதத்தின் போது வாடிக்கையாளர் பாவித்த நிகர மின்சார அலகிற்கு மட்டுமே அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதாகும். மின்வழங்கலுக்கு விநியோகிக்கப்படுகின்ற சூரிய சக்தியானது மாதம் ஒன்றின் போது நுகரும் மின்சாரத்தின் அளவை விட அதிகமானதாக இருந்தால், மீதித் தொகையினை உயர்ந்தபட்சம் 10 வருடங்களுக்கு வரவாக எதிர்காலத்திற்காக முன் கொண்டு செல்ல முடியும். இத்திட்டத்தின் கீழ் நுகர்வுக்கு மேலதிகமாக விநியோகிக்கப்படும் மின்சாரத்திற்கு எந்தவொரு கொடுப்பனவும் செலுத்தத் தேவவையில்லை.

நிகர கணக்கியல் திட்டம்

வீடுகளில் அல்லது வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்கல அடுக்கினைப் பயன்படுத்தி பிறப்பாக்கப்படும் மின் அலகுகள் நுகரப்படும் அளவை விட அதிகரித்தால், மின்சேவை வழங்குநரினால் முதல் 07 வருடங்களின் போது அலகு ஒன்றிற்கு ரூபா.22 எனும் வீதத்திலும், 8வது வருடத்திலிருந்து அலகு ஒன்றிற்கு ரூபா.15.50 எனும் வீதத்திலும் மேலதிகமாகச் செலுத்தப்படல் வேண்டும்.

நுகர்வானது உற்பத்தி செய்யப்படும் மின் அலகுகளை விட அதிகரித்தால், மேலதிக மின் பாவனைக்காகத் தற்போதைய மின்கட்டணத்தில் நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்கும்.

நிகர பிளஸ் திட்டம்

வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்கல அடுக்குகளைப் பயன்படுத்தி பிறப்பாக்கப்படும் மின்சாரத்தின் அளவிற்கு வருமானம் பெறுவதில் இது ஈடுபடுகின்றது. நிகர அளவீட்டு முறையினைப் போலன்றி, வாடிக்கையாளரின் மின்நுகர்வு மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையில் எந்தவொரு இணைப்பும் இல்லை. மின் உற்பத்தி மற்றும் அதன் நுகர்வு ஆகியவற்றைத் தனித்தனியாக அளவிடுவதற்கு இரண்டு வெவ்வேறு மின்மாணிகள் நிறுவப்படும்.

வாடிக்கையாளர் தற்போதுள்ள மின்கட்டணத்திற்கு ஏற்ப பாவித்த மின்சாரத்திற்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். அதேவேளை, மின்சேவை வழங்குநர் வாடிக்கையாளர் உற்பத்தி செய்கின்ற மொத்த மின்சாரத்திற்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

Top