Notice: Only variables should be passed by reference in /home/xs7d1onnbe6c/domains/rooftopsolar.lk/html/ta/includes/header.php on line 3

உத்தரவாதம் மற்றும் காப்புறுதிப் பக்கம்

உத்தரவாதம்

கூரை உச்சி (மேற்கூரை) PV அமைப்பானது பல கூறுகளைக் கொண்டிருக்கின்றது. அவற்றில் ஒவ்வொன்றும் அதற்குரிய செயற்திறன் வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. அமைப்பின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கு, ஒவ்வொரு கூறுக்கும் பின்வரும் உத்தரவாதம் மற்றும் காப்புறுதி தேவைப்படும்.

சூரிய மின்கல அடுக்குகள்

  • கூறுகளுக்கான உற்பத்தியாளர் உத்தரவாம் 10 வருட உற்பத்திக் குறைபாடுகளைக் காப்பிடும்.
  • முதல் 10 வருடங்களுக்கான மதிப்பிடப்பட்ட வெளியீட்டின் குறைந்தபட்சமான செயற்திறன் 90மூ ஆகும், மேலும் அடுத்த 10.5 வருடங்களுக்கான மதிப்பிடப்பட்ட செயற்திறன் 80மூ ஆக இருக்கும்.
  • 25 வருடச் செயற்திறன் உத்தரவாதம் முதல் வருடத்தின் போது 2.5% இனை விட அதிகரிக்காத உயர்ந்தபட்சச் செயற்திறன் இழப்பை உத்தரவாதப்படுத்துகின்றது. மேலும், அதற்குப் பிறகு வருடத்திற்கு 0.5-0.7% செயற்திறன் இழப்பையும் உத்தரவாதப்படுத்துகின்றது.

இன்வேட்டர் (நேர்மாற்றி) :

  • குறைந்தபட்ச 10 வருட உற்பத்தியாளர் உத்தரவாதத்தை இன்வேட்டர் (நேர்மாற்றி) உத்தரவாதம் காப்பிடும். இந்த உத்தரவாதமானது இன்வேட்டரின் பகுதிகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகள் அல்லது பாதிப்புக்களைக் காப்பிடும்.

பொருத்துதல் மற்றும் மின்கம்பியிடல்


  • பொருத்துதல் அமைப்பு மற்றும் மின்கம்பியிடல் அமைப்பிற்கு சேவை வழங்குநரால் 5 வருட உத்தரவாதக் காப்பீடு வழங்கப்படுகின்றது.

விற்பனையாளர்கள் அல்லது சேவை வழங்குநர்கள் அனுமதி பெற்ற ஆய்வு கூடங்களில் இருந்து பெற்ற அவசியமான பரிசோதனை சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பொருத்தமான PV சூரிய மின்கல அடுக்குகள், இன்வேட்டர்கள், மற்றும் DC கம்பி வடங்களுக்காக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையிடமிருந்து இணக்கச் சான்றிதழைப் பெற வேண்டும்.

காப்புறுதி (காப்பீடு)

மிகவும் புகழ்பெற்ற மற்றும் சிறந்த காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக பின்வருவனவற்றுக்கு விற்பனையாளர் அல்லது சேவை வழங்குநர் காப்புறுதிக் காப்பீட்டை வழங்க வேண்டும்.


  • PV அமைப்பின் கூறுகளுக்கு பரிபூரணமான பொது இழப்பீடு
  • நிறுவுதல் அல்லது நிர்வகித்தலின் போது ஏற்படும் எந்தவொரு விபத்திற்கும் பணியாளர்களுக்கான இழப்பீடு
Top