தகுதிப் பக்கம்

உயர்ந்தபட்சக் கடன் எல்லையின் கீழ் கூரை உச்சியில் (மேற்கூரையில்) நிறுவுவதற்கான (உபதிட்டங்கள்) தகுதி வரையறை

இத்திட்டத்தின் கீழ் பின்வரும் உப திட்டங்கள் தகுதியுள்ளதாக இருக்கும்

  • வதிவிடக் கூரை உச்சி (மேற்கூரை) - தற்போதுள்ள நிரந்தரமான வதிவிடக் கட்டிட கூரை உச்சியில் சூரியசக்தி PV அமைப்பு நிறுவப்படல்.
  • வர்த்தக அளவீட்டிலான கூரை உச்சி (மேற்கூரை) - தற்போதுள்ள நிரந்தரமான வர்த்தக அளவீட்டுக் கட்டிடக் கூரை உச்சியில் சூரியசக்தி PV அமைப்பு நிறுவப்படல்.

இத்திட்டத்தின் கீழுள்ள கொள்திறன் வரையறைகள் பின்வருமாறு:

  • கூரை உச்சியில் (மேற்கூரையில்) நிறுவப்படவுள்ள அதிகபட்ச சூரிய சக்தி பிறப்பாக்கம் 50 KW இனை விட அதிகரிக்காது.
  • ஒன்றுதிரட்டிய உயர்ந்தபட்சக் கொள்திறன் 50 KW இற்கு உட்பட்டதாக தனியொரு வாடிக்கையாளர் பல உப திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது கருதுவது யாதெனில், வாடிக்கையாளர் ஒன்றுக்கு மேற்பட்ட உபதிட்டங்களுக்கு, அதாவது அவை அனைத்தினதும் மொத்த நிறுவல் கொள்திறன் 50 KW இனை விட அதிகரிக்காதவாறு நிதியினைப் பெற முடியும்.

உபதிட்டங்களுக்கு வழங்கப்படும் ADB நிதியளிப்பு விபரங்கள் கீழ்வருமாறு

  • ரூபா.1.5 மில்லியனை விட அதிகரிக்காத வகையில் வதிவிடக் கூரை உச்சி (மேற்கூரை) நிறுவல்களுக்கான உபதிட்டங்களுக்கு ஏற்பட்ட செலவில் 100% வரை
  • அனைத்து வர்த்தகக் கூரை உச்சி (மேற்கூரை) உபதிட்டங்களுக்கும் மற்றும் ரூபா.1.5 மில்லியனை விட அதிகரிக்கின்ற வகையிலான வதிவிட கூரை உச்சி நிறுவல்களுக்கான உபதிட்டங்களுக்கும் ஏற்பட்ட செலவில் 80% வரை

உப கடன் செலுத்தல் காலம் பின்வருவனவற்றிற்கு உட்பட்டதாகவே இருக்கும்,

  • மீள்செலுத்தல் காலம் 10 வருடங்களை விட அதிகரிக்காது
  • வதிவிட மற்றும் வர்த்தகக் கூரை உச்சி உப திட்டங்களுக்கு 10 வருட மீள்செலுத்தல் காலத்தினுள் 6 மாதங்களை விட அதிகரிக்காத சலுகைக் காலத்தைக் கொண்டிருக்கும்

சூரியசக்தி PV அமைப்பினை நிறுவுவதற்கு பயன்படுத்தக்கூடிய முன்மொழியப்பட்ட வதிவிட அல்லது வர்த்தகக் கட்டிடத்திற்கு வாடிக்கையாளர் (பயனாளி) உரிமையாளராக இருத்தல் வேண்டும்.

Top