Notice: Only variables should be passed by reference in /home/xs7d1onnbe6c/domains/rooftopsolar.lk/html/ta/includes/header.php on line 3

சேவை வழங்குநர்கள்

கணக்கெடுப்பு, வடிவமைப்பு, உபகரணங்கள் அல்லது ஆவணங்களின் வழங்கல், நிறுவுதல் மற்றும் பரிசோதித்தல் மற்றும் நிறுவலுக்குப் பிந்திய பாதுகாப்புதவி உள்ளடங்கலாக சேவைகளின் பரிபூரணமான திட்டங்களை வழங்குவதற்கு இயலுமான விற்பனையாளர்கள் அல்லது சேவை வழங்குநர்கள் (விண்ணப்பதார நிறுவனம்) இலங்கையில் கூரை உச்சியில் (மேற்கூரையில்) சூரியசக்தி PV நிறுவலில் ஈடுபடுவதற்கு இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையில் பதிவு செய்தல் வேண்டும். பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களின் மேம்படுத்தப்பட்ட பட்டியலுக்காக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையின் இணையத்தளத்தை தயவுசெய்து பார்வையிடுங்கள்.

பிரதான கொள்முதல்களின் முன்மொழிவுக்கான குறிப்பான கோரிக்கைகளில் பங்குபெறுவதற்கான விற்பனையாளர்களின் இயலுமையைத் தீர்மானிப்பதற்குத் தேவைப்படும் மேலதிகமான தகவல்களை வழங்குமாறும் அல்லது அதனை மேம்படுத்துமாறும் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் வேண்டப்படலாம். இங்கு இத்திட்டங்களுக்கான குறிப்பான மேலதிகமான தகுதி வேண்டப்படலாம்.

பின்வருவனவற்றை விற்பனையாளர்கள் கண்டிப்பாக உறுதிப்படுத்தல் வேண்டும்;

  1. 2007 இன் 7ம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் விற்பனையாளர் தன்னை நிறுவனமாகப் பதிவு செய்திருத்தல் வேண்டும்;
  2. மேலும் விற்பனையாளர் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையில் சூரியசக்தி PV சேவை வழங்குநராக தன்னைப் பதிவு செய்தல் வேண்டும்;
  3. பின்வரும் குறைந்தபட்ச உத்தரவாதங்களை விற்பனையாளர் வழங்க வேண்டும்;
    1. சூரியசக்தி PV மின்கல அடுக்கு - 10 வருடங்கள் (உற்பத்தியாளர் உத்தரவாதம்)
    2. இன்வேட்டர் (நேர்மாற்றி)- 10 வருடங்கள் (உற்பத்தியாளர் உத்தரவாதம்)
    3. சூரியசக்தி PV அமைப்பு - (விற்பனையாளர் உத்தரவாதம் அமைப்பை பொருத்துதல் மற்றும் 5 வருடங்கள் மின்கம்பி இணைத்தல்)
    4. குறைந்தபட்ச செயற்திறன் - 20 வருடங்கள்
  4. விற்பனையாளரினால் நிறுவப்படும் அனைத்து அமைப்புக்களின் PV மின்கல அடுக்கு மற்றும் இன்வேட்டர்கள் ஆகியவற்றின் உத்தரவாதம் மற்றும் தரநிலை போன்றவற்றுக்காக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையினால் விநியோகிக்கப்படும் வலிதான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்;
  5. விற்பனையாளர்கள் அமைப்பினை நிறுவும் போது விபத்துகளுக்கான பணியாளர் இழப்பீடு மற்றும் உபகரணப் பாதிப்பிற்கான காப்பீடு ஆகியவற்றுக்குப் பரிபூரணமான காப்புறுதியைப் பெறல் வேண்டும்;
  6. மேலும், அமைப்பின் நிறுவலை பொறுப்பேற்பதற்கு முன்னர் ஒவ்வொரு நிறுவல் மாகாணத்தினுள்ளும் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராந்திய அலுவலகம் அல்லது நியமிக்கப்பட்ட முகவர் ஒருவரை விற்பனையாளர் வைத்திருக்க வேண்டும்.

பின்வருவனவற்றை வைத்திருப்பது மேலும் விரும்பத்தக்கது,

  1. விற்பனையாளர் தொழில்நுட்பக் குழு ஒன்றை பின்வரும் தகைமைகளுடன் வைத்திருத்தல்,
    1. குறைந்தபட்ச 3 வருட தொழிற்துறை அனுபவமுள்ள குறைந்தபட்சம் ஒரு பட்டதாரி பொறியாளர் (பொறியியலாளர்) அல்லது 01 வருட சூரியசக்தி தொழிற்துறை அனுபவம் உள்ளடங்கலாக, 05 வருடத் தொழிற்துறை அனுபவத்துடன் மின்னியல் அல்லது இயந்திரவியல் பொறியியல் டிப்ளோமா NVQ மட்டம் 6 தகைமையுடைய ஒரு பொறியாளர். மற்றும்,
    2. 03 வருட தொழிற்துறை அனுபவத்தினைக் கொண்ட NVQ மட்டம் 3 அல்லது அதற்கு சமமான தகைமையுடைய குறைந்தபட்சம் 01 தொழில்நுட்பவியலாளர்,
  2. விற்பனையாளருடைய கடந்த கால அனுபவப் பதிவுகள் உள்ளடங்குகின்றன
    1. இறுதி நிதியாண்டின் (தணிக்கை செய்யப்பட்ட) போதான நேர்மறையான நிகர சொத்து மதிப்பு;
    2. கடந்த 2 வருடங்களில் குறைந்தபட்சம் 20 கூரை உச்சி சூரியசக்தி அமைப்பு நிறுவியிருத்தல்;
    3. கடந்த 2 வருடங்களில் குறைந்தபட்சம் ஒன்றுதிரட்டிய கொள்திறன் 150 KW சூரியசக்தி அமைப்பு நிறுவியிருத்தல்.
    4. 20 வருட செயற்திறன் உத்தரவாதம் ஆக கூடிய செயத்திறன் தேய்வு முதல் வருடத்தில் 2.5% குறைவாகவும் தொடரரும் வருடங்களில் 0.5% -0.7% ஆக உறுதியளிக்கிறது
Top